அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

ஆலிம்களைக் கவர்ந்த காதியானி (அபூதாரிக்)


மௌலான உபைதுல்லாஹ் ஸிந்தி அவர்கள் உலகப் புகழ்பெற்ற இந்திய அறிஞர். இவர் அரபு நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள். அந்நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்கள் இவரை ஒரு பேரறிஞராக ஏற்று கௌரவித்துள்ளன. இவர் டில்லியிலுள்ள ஜாமியா மில்லியா நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். இவரைப் பற்றி இவருடைய மாணவர் மௌலான முஹம்மது ஸர்வார் என்பவர் உருது மொழியில் இஹ்பாதாத்தோ மல்பூஸாத் ஹஸ்ரத் மௌலான உபைதுல்லாஹ் ஸிந்தி என்ற நூலை எழுதியுள்ளார். அந்நூலில் காணப்படும் குறிப்பு

மௌலானா உபைதுல்லாஹ் ஸிந்தி அவர்கள் மக்காவிலுள்ள ஹரம் ஷரீபில் மக்களுக்கு போதித்துக் கொண்டிருந்த போது, ஹக்கீம் நூருத்தீன்(முதல் கலீபத்துல் மஸீஹ்) திருக்குர்ஆனைக் கற்றறிந்த ஒரு மேதை எனக் குறிப்பிட்டார். இதனைக் கேட்ட அங்கிருந்த ஒருவர் அவர் காதியானியாயிற்றே என்றார். அதற்கு மௌலான அவர்கள், அவர் காதியானி அல்ல என்று நான் கூறவில்லையே, அவர் திருக்குர்ஆனைக் கற்றறிந்த மேதை என்றே குறிப்பிட்டேன் என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

அடுத்த நாள் அவருடைய வீட்டிற்கு நான் (நூலாசிரியர், மௌலான முஹம்மது ஸர்வார்) சென்றிருந்தேன். ஹக்கீம் நூருத்தீன் அவர்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினேன். மௌலான உபைதுல்லாஹ் ஸிந்தி அவர்கள் என்னிடத்திலே கீழ்வருமாறு கூறினார்.

நான் ஹக்கீம் ஸாஹிப் அவர்களை பல முறை சந்தித்துள்ளேன். உண்மையிலேயே அவர் திருக்குர்ஆனை நன்கு தெரிந்தவராவார். நான் பல இஸ்லாமியா நாடுகளில் வாழ்ந்திருக்கிறேன். இங்கு, மக்காவிற்கு பல நாடுகளிலிருந்து பெரிய பெரிய முஸ்லிம் அறிஞர்கள் வருகிறார்கள், அவர்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. ஆனாலும் ஹக்கீம் நூருத்தீன் அவர்களைப் போன்ற திருக்குர்ஆனில் ஞானமுள்ளவரை நான் கண்டதில்லை. அத்தகைய பேரறிஞர் அவர்.ஆனால் அவர் ஏன் காதியானி ஆனார் என்பதைப் பிறகு பேசுவோம்.(பக்கம் 34)

அண்மையில் காலமான மௌலான ஷஹாபுத்தீன் அவர்கள் தொடர்பான ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறேன். இவர் தேவ்பந்தியில் மௌலான ஸிந்தியோடு ஒன்றாகப் படித்தவர். மௌலான ஷஹாபுத்தீன் கூறுகிறார் நான் இஸ்லாமிய மருத்துவ முறையை (திப்பு) ஹக்கீம் நூருத்தீன் அவர்களிடமிருந்து கற்பதற்காக காதியான் சென்றோம். மௌலான ஸிந்தி அவர்களும் என்னுடன் வந்திருந்தார். அவர் ஹக்கீம் நூருத்தீன் அவர்களை ஏற்கனவே அறிந்திருந்தார். நாங்கள் காதியானி அடைந்த ஹக்கீம் ஸாஹிபை சந்தித்தப்போது மௌலான ஸிந்தி அவர்கள் ஹஸ்ரத் பைகஹி எழுதிய ‘தலைல்லே நுபுவ்வத்’ தங்களிடம் உள்ளதா என்று கேட்டார். ஹக்கீம் நூருத்தீன் அவர்களிடம் பெரிய நூலகமே இருந்தது. அதில் பல அறிய நூல்கள் இடம்பெற்றிருந்தன. மௌலான
கேட்ட நூலும் அதில் இருந்தது.

ஹக்கீம் நூருத்தீன் அவர்கள் ஒரு காதியானியாக இருந்தது மௌலான ஷஹாபுத்தீன் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதற்க்கு எதிராக கவிதைகள் கூட அவர் எழுதியுள்ளார். என்றாலும் ஹக்கீம் நூருத்தீன் (ரலி) அவர்கள் முதலாவது கலீபதுல் மஸீஹ்)ஓர் உயரிய பண்பாளர், நல்லோக்கத்தின் சிகரம், பரந்த மனப்பான்மையுல்லவர், கற்றறிவதில் ஆழ்ந்த பற்றுள்ளவர் என்றெல்லாம் இவர் ஏற்றுக் கூறியுள்ளார் (பக்கம் 34)