அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

யூதர்களின் கைக் கூலிகள் யார்!

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தபோது மேற்கத்திய சக்திகள் தங்களின் சுய நலனுக்காக முஸ்லிம் நாடுகளோடு பல ஒப்பந்தங்களை செய்து கொண்டன முஸ்லிம் நாடுகளுக்குப் பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து அந்நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரே சக்தியாக மாறவிடாது தடுத்திருந்தார்கள். இதனால் முஸ்லிம் நாடுகள் ஒன்றை ஒன்று போட்டி மனப்பான்மையோடு எதிர்த்துக் கொண்டிருந்ததன்.

அதே சமயத்தில் இந்த மேற்கத்திய வல்லரசுகள் யூதர்களோடு கலந்துரையாடி அவர்களோடு பல ஒப்பந்தங்களையும் செய்தனர். அரபு நாடுகளோடும்

யூதர்களோடும் அவர்கள் செய்திருந்த ஒன்றுகொன்று முரண்பாடானவை.

இவைகளின் விளைவாக 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு உருவானது. அப்போது ஹஸ்ரத் கலீபத்துல் மஸீஹ் அவர்கள் “அல் குப்று மில்லதுன் வாஹிததுன்” நிராகரிப்பாளர்கள் எல்லாம் ஓரினம் என்ற நபிமொழியை தலைப்பாகக் கொண்ட ஒரு நூலை வெளியிட்டார்கள். இதில் முஸ்லிம் நாடுகள் அனைத்தும் தங்களுக்கிடையே உள்ள வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட வேண்டிய அவசியத்தை வலியுறித்திக் கூறப்பட்டிருந்தது.

அது போன்று “ஹயாத்துள் உம்மில் முத்தஹித்தி வ களாறு தக்ஸீமி பாலஸ்தீன்” என்பதாகும். இதில் மேற்கத்திய நாடுகள் ஜியோனிஸ்ட் சக்திகளும் செய்திருந்த சதித்திட்டன்களைப் பற்றியும் பாலஸ்தீனத்திலிருந்த துறைமுகத்தை யூதர்களின் ஒப்படைத்த தந்திரம் பற்றியும் விளக்கப்பட்டிருந்தது.
அர் ரிஸாலா ஏட்டின் ஆசிரியர் இந்த இரண்டு அறிக்கைகளையும் பற்றி இவ்வாறு கூறுகிறார்

இந்த இரண்டு அறிக்கைகளை அஹ்மதிய்யா ஜமாஅத் பரப்ப எடுத்துக் கொண்ட முயற்ச்சிகளை பற்றி நான் நன்கறிவேன். அஹ்மதிய்யா ஜமாஅத் தெரிவித்த கருத்துகளின்படி அரபு நாடுகள் செயல் பட்டிருந்தால் இஸ்ரேல் என்றொரு நாடு இல்லாதிருக்கும் என்பதையும் நான் உணர்வேன். இதன் காரணமாகத்தான் இந்த ஏகாதிபத்தியவாதிகள் அஹ்மதிய்யா இயக்கத்திற்கெதிராக ஏனைய முஸ்லிம்களை தூண்டுவதன் மூலம் அதன் கருத்துக்களை ஏற்கவிடாது செய்தனர்.

ஸபருல்லாஹ் கான் பற்றி அரபு நாடுகள்.

சௌத்ரி முஹம்மது ஸபருல்லாஹ் கான் ஐ.நா சபையில் யூதர்களுக்கு சாதகமாகப் பேசி இருந்தார் என பாகிஸ்தான் முல்லாக்கள் கூறி மக்களை அஹ்மதிய்யா ஜமாஅத்திர்கெதிராக தூண்டிவிட்டார்கள்.

இது இவர்கள் மாபெரும் பொய்யர்கள் என்பதையும் நன்றி கெட்டவர்கள் என்பதையுமே இது காட்டுகிறது. ஸபருல்லாஹ் கான் அவர்கள் பாகிஸ்தான் வெளிவிவகார மந்திரியாக இருந்தபோதும் 1954 ஐ.நா சபையில் தலைமை நீதிபதியாக இருந்தபோதும் எல்லா முஸ்லிம் நாடுகளுக்காகவும் அரும்பணியாற்றினார்கள்.

ஸபருல்லாஹ் கான் அவர்கள் முஸ்லிம் உலகிற்காக ஐ.நா சபையில் வாதாடியதை வரலாறு பேசும். அஹ்மதிகளுக்கெதிராக கிளர்ச்சிகள் செய்யப்பட நாட்களில் கூட ஸபருல்லாஹ்கான் அவர்களின் சேவையை அரபு நாட்டுப் பத்திரிகைகள் பாராட்டி இருக்கின்றன.

அர் ரிஸாலா ஏட்டில் 1983 ஜூன் இதழில் அந்த ஆசிரியர் அப்துல் ஹமீது அல் காதிப்பு இவ்வாறு எழுதி இருந்தார்:-

‘முஹம்மது ஸபருல்லாஹ் கான் சாஹிப் அவர்கள் பாலஸ்தீனத்திற்குப் போராடிய முன்னணி வீரராவார். பாலஸ்தீன விஷயத்தில் அரபு நாடுகளின் உரிமைகளை பாதுகாக்க, இறைவன் அவருக்கு அளித்திருந்த அத்தனை சக்திகளையும் பயன்படுத்தினார். அவருடைய பேச்சுத் திறன் உண்மையான இஸ்லாமிய ஆவியினால் உருவானதாகும்”

பாலஸ்தீனம் பற்றிய பிரச்சனைக்கு தீர்வு காணும் பணியில் ஸர் ஸபருல்லாஹ் கான் அவர்கள் ஐ.நா சபையில் தீவிரமாக ஈடுபட்ட சமயம் ஏகாதிபத்தியவாதிகள் அவருக்கெதிராக ஏனைய முஸ்லிம்களை
தூண்டினர். இந்த சக்தியின் பிரபல்யமான ஏஜென்டாக இருந்த மன்னர் பாரூக், அஹ்மதிகளுக்கெதிரான மார்க்கத் தீர்ப்பை பாலஸ்தீன முப்தியைக் கொண்டே வெளியிட செய்தார்.

இந்த மார்க்கத் தீர்ப்பை கண்ட அப்போதைய அரப் லீகின் செயலாளர் ஜெனரல் அப்துர் ரஹ்மான் இஸாம் பாஷா இவ்வாறு ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

“அஹ்மதிய்யா ஜமாத்திற்கும் பாகிஸ்தான் வெளிவிவகார மந்திரி ஸபருல்லாஹ் கான் சாஹிப் அவர்களுக்கும் எதிரான முப்தியின் கருத்து ஒரு மார்க்கத் தீர்ப்பாக ஏற்றுக் கொல்லப்பட்டிருப்பது குறித்து நான் வியப்படைகிறேன். அதனை நாம் ஒரு மார்க்கத் தீர்ப்பாக ஏற்றுக் கொண்டால் நமது எதிர்காலம் இத்தகு ஆலிம்களின் கருத்துகளிலும் கருணையிலும் அடங்கியிருக்கிறது என்று நாம் ஏற்றுக் கொண்டவர்களாவோம்.

ஸபருல்லாஹ் கான் அவர்கள் தமது சொல்லாலும், செயலாலும் ஒரு முழுமையான முஸ்லிமாக இருக்கின்றார். இஸ்லாத்தின் எழுச்சிக்காக அயராது பாடுபடுகின்ற உத்தமர் அவர், இதன் காரணமாகத்தான் மக்கள் அவருக்கு பெருமதிப்பளிக்கின்றனர், மரியாதையும் செய்கின்றனர். முஸ்லிம் நாடுகள் அவராற்றிய தொண்டிற்காக அவருக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளன.”

1952 இல் அஸ்ஸமான் எனும் அரபு நாட்டு ஏடு இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.

“இந்த பத்வா வேதனையளிக்கின்ற ஒன்றாகும். ஏனெனில் ஸபருல்லாஹ் கான் முஸ்லிம் நாடுகளுக்கு பொதுவாகவும், எகிப்திற்கு குறிப்பாகவும் அருந்தொண்டாற்றிய ஒருவர் இஸ்லாமிய நாடு அவருக்கு நன்றி பாராட்ட கடமைப் பட்டிருக்கிறது. “

1952 ஜூலை 26 இல் “அக்பார் அல் யவ்ம்” என்ற பத்திரிக்கை இவ்வாறு கூறியிருந்தது.

இவரைப் பற்றி (ஸபருல்லாஹ் கான் அவர்கள் பற்றி) காபிர் எனக் கூறப்பட்டால் நல்லடியார்கள் அனைவரும் இத்தகைய காபிர் ஆகவே விரும்புவார்கள்.

“பைரூல் மஸா “ என்ற ஏடு இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.

“முப்தி ஷேக் மல்பூபிற்கும் ஸபருல்லாஹ் கானுக்கும் வேறுபாடு உண்டு. முப்தி செயலாற்ற ஒரு முஸ்லிம். அவர் ஏதேனும் செய்கிறார் என்றால் அது வேற்றுமையை ஏற்ப்படுத்தும் “திருப்பணி” ஒன்றுதான். ஆனால் ஸபருல்லாஹ் கான் அவர்கள் நற்செயலுள்ள ஒரு முஸ்லிமாவார். அல்லாஹ் தனது மறையில் நம்பிக்கையோடு நற்செயலையும் வலியுறுத்தியுள்ளான். நன்னம்பிக்கையும், நற்செயலும் உள்ள ஒருவரை காபிர் எனக் கூறுவது அறிவுக்குப் புறம்பான ஒன்றாகும்.

இவ்வாறு முஸ்லிம் உலகுக்கு அபாயங்கள் ஏற்படும் போதெல்லாம் அஹ்மதிய்யா ஜமாஅத் தனது சக்திக் கேற்ப அவற்றை தடுக்கின்ற பணியில் எப்போதும் முன்னணியில் நின்றிருக்கிறது.